ஆசிரியர் தினத்தன்று(6) நாடளாவிய ரீதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு– ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர் தினமான எதிர்வரும் 6ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எவ்வித தடைவந்தாலும் தீர்மானித்தப்பட ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலைகளுக்கு வர வேண்டுமாயின் தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும். அதற்கமையவே இந்த போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.

தொகுதி கல்வி வலயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.