அதிபர்-ஆசிரியர் பிரச்சினைகளை தீர்க்க அரசு முன் வரவேண்டும் – அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி

ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு வழங்குவதை விடுத்து அரசாங்கம் சர்வாதிகரமான முறையில் செயற்படுகிறது.

சர்வதேச ஆசிரியர் தினத்திற்கு முன்னதாக ஆசிரியர்-அதிபர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்துகிறோம். என அதிபர்-ஆசிரியர் தொழிற் சங்க முன்னணியின் தலைவர் சுதேஷ்வர விமலரத்ன தெரிவித்தார்.


கொழும்பில் இன்று இடம் ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சம்பள பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்- அதிபர்கள் சுமார் 3 மாத காலமாக தொழிற் சங்க போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்வதற்காக இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.


60 சதவீதமான மாணவர்கள்நிகழ்நிலை முறைமை ஊடான கற்பித்தலில் பங்குப்பற்றுவதில்லை. கொவிட் தாக்கத்தினாலும், ஆசிரியர்- அதிபர் தொழிற் சங்க போராட்டத்தினாலும் மாணவர்களின் கல்வி நிலை பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.

எமது பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசாங்கம் சர்வாதிகாரமான முறையில் போராட்டத்தை முடக்க முயற்சிக்கிறது.

சம்பள பிரச்சினைக்கு 4 கட்டமாக தீர்வு வழங்குவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. 1997 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து ஆசிரியர்- அதிபர்களுக்கு சம்பள விவகாரத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.


ஆகவே தொடர்ந்து தாமதிக்க முடியாது என்ற காரணத்தினால் ஒரு கட்டத்தில் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோருகிறோம்.

பிரச்சினைகளுக்கு நிதந்தர தீர்வு காண நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட அனுமதி கோரியிருந்தோம். இருப்பினும் இதுவரையில் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ள சர்வதேச ஆசிரியர் தினத்திற்கு முன்னர் சாதகமான தீர்வை பெற்றுத் தருமாறு வலியுறுத்தியுள்ளோம் என்றார்.