சர்வதேச ஆசிரியர் தினத்தன்று அதிபர்களும் போராட்டத்தில் – பியசிறி பெர்ணான்டோ

எதிர்வரும் 6ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச ஆசிரியர் தினத்தன்று, அதிபர்களும் போராட்டத்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது வீடுகளுக்கு முன்பாக கருப்பு கொடியை ஏற்றி, தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


நாடு பூராகவும் சுமார் 11,200 அதிபர்கள் உள்ளதாகவும், அனைத்து அதிபர்களும் தமது போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரி இந்த போராட்டம் தொடங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.