வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்கள் செயலிழந்தன..!

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடக சேவை இலங்கை உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் முடங்கியதால் பயனாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உலகளவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஆகியவை முக்கிய சமூக வலைத்தளங்களாக விளங்கி வருகின்றன.


இந்த நிலையில் தற்போது திடீரென மூன்று செயலிகளும் ஒரே நேரத்தில் முடங்கியது. இதனால் இலங்கை உட்பட உலகளாவிய நாடுகளில் உள்ள பயனாளிகள் அவதிக்குள்ளாகினர்.