பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம் சேவைகள் வழமைக்கு திரும்பின..!

செயலிழந்த வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களின் சேவை 6 மணித்தியாலங்களின் பின் வழமைக்கு திரும்பியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரதான சேவர் கட்டமைப்பில் ஏற்பட்ட கேளாறே, இந்த பிரச்சினைக்கான காரணம் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.


உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான வட்ஸ்அப், இன்ஸ்டா கிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடக சேவை இலங்கை உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் நேற்று முடங்கியதால் பயனாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.


இந்த நிலையில் இவ்வாறு திடீரென மூன்று செயலிகளும் ஒரே நேரத்தில் முடங்கியதையடுத்து, சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் அவற்றின் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.