அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கு இன்றைய (5) அமைச்சரவையில் தீர்வு???

நேற்று மாலை அவசர அழைப்பின் பேரில் அதிபர் ஆசிரியர் சங்க கூட்டணியின் தொழிற் சங்க பிரதிநிதிகள் குழு மற்றும் கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.


அதில் மீண்டும் ஒருமுறை தற்போது முன்வைத்துள்ள சம்பள யோசனையை கட்டங் கட்டமாக வழங்காது ஒரே முறையில் பெற்றுத் தரவும் யோசனை முன் வைக்கப்பட்டது.


அந்த யோசனையை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்மொழியவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக நீண்ட கலந்துரையாடலின் பின் இன்று (5) அமைச்சரவை தீர்மானத்தோடு அடுத்த நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என அதிபர் ஆசிரியர் சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

.