அதிபா்–ஆசிரியர் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு; ஆராய சர்வ கட்சி மாநாடு..!

அதிபா்-ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவது தொடர்பில், அதிபா் – ஆசிரியா் சம்பள பிரச்சினைக்கு எதிரான தேசிய ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வக்கட்சி மாநாடு நாரயேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று (06) மாலை இடம் பெற்றது. இந்த மாநாட்டில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா்.


அதிபா்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய இடத்தை வழங்குமாறும் ‘சுபோதினி’ அறிக்கை நடைமுறைப்படுத்துமாறும் மீண்டும் கோருவதாக ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் இதன் போது கோரியுள்ளனா்.

அதிபா்கள் ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அரசியல் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனா்.


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதுடன் 13 அதிபா் ஆசிரியர் சங்கங்களும் கலந்து கொண்டுள்ளன.