பாடசாலை மாணவர்களுக்கு அவரவர் பாடசாலைகளில் 21 ஆம் திகதி முதல் பைசர் தடுப்பூசி – இராணுவத் தளபதி

நாட்டிலுள்ள 18, 19 வயதுகளையுடைய பாடசாலைச் செல்லும் சகல மாணவர்களுக்கும் அவரவர் பாடசாலைகளிலும், குறித்த வயது பிரிவைச் சேர்ந்த பாடசாலை செல்லாதோருக்கு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


குறித்த வயது பிரிவினருக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கான வேலைத் திட்டங்கள் பாடசாலை மட்டத்திலும், பிரதேச சுகாதார மருத்துவ பிரிவு மட்டத்திலும் முன்னெடுக்கப் படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


நாட்டில் 15 – 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இதுவரையில் சுமார் 10,000 சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.


இவர்களில் எவருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாத நிலையில் ஆரோக்கியமான சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அதிபர்-ஆசிரியர் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.