அதிபா்கள்-ஆசிரியா்களின் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வை பெறும் வரை போராட்டம் தொடரும்..!

அதிபா்கள்-ஆசிரியா்களின் பிரச்சினைகளுக்கு இறுதி தீர்வு பெற்றுக் கொடுக்கும் வரை எமது போராட்டத்தை நிறுத்த போவதில்லை என இலங்கை ஆசியர் சங்கத்தின் பொதுச் செயலாளா் ஜோசப் ஸ்டாலின் இன்று (08) தெரிவித்தாா்.

கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தாா்.


எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் அதிபா்கள், ஆசிரியர்கள் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டாா்.


தங்களின் போராட்டங்களுக்கு தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் பின் வாங்குமாக இருந்தால் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மாற்றுத் தீர்மானமொன்று எடுக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தாா்.