“செயற்றிட்டமுறை” முழுமையான விளக்கம்..!

✳️செயல் ரீதியான கற்றலை வலியுறுத்தி ஜோன் டூயி முன்வைத்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நீல் பெக்றிக் என்பவரால் 1918ஆம் ஆண்டு ஒரு கற்றல் முறையாக செயற்றிட்ட முறை அறிமுகப் படுத்தப்பட்டது.

*️⃣செயற்றிட்ட முறையானது மாணவரை மையமாக கொண்டதோர் செயற்பாடாகும்.

*️⃣மாணவர் தாமாகவே கற்றல் செயற்பாடுகளை திட்டமிட்டு நடைமுறை படுத்துவதாகும்.

*️⃣செயற்பாடுகள் நடைமுறையில் தொடர்புபட்டவை.

*️⃣கருத்துக்கள் உயிர்ப்புள்ள யதார்த்தமான செயற்பாடுகளாக அமையும் .

*️⃣யாதேனும் கற்றல் குறிக்கோள்களின்பால் செயற்பாடுகள் முனைப்பாக்கப் பட்டிருக்கும்.

*️⃣செயற்பாடுகள் அர்த்தபுஷ்டியுள்ளவையாக இருக்கும். இயற்கையானதாகவும், உயிரோட்டமான தாகவும் இருக்கும்.

*️⃣ ஒரு முழுமையான செயற்பாடாக இருக்கும்.


✳️செயற்றிட்ட முறையின் பண்புகள்.

*️⃣அறிவு புலத்தினை மேல் எழச் செய்ய முடியும்.

*️⃣கோட்பாட்டிற்கும் பிரயோகத்திற்குமான இடைவெளியினை குறைக்க முடியும்.

*️⃣ ஆசிரியரின். வாண்மை விருத்திக்கு உதவும்.

*️⃣ தரவட்டங்களை கட்டியெழுப்ப உதவும்

*️⃣ஆய்வாளர் அறிவிற்கேற்ப கட்டியெழுப்ப முடியும்.

*️⃣ ஆசிரியருக்குப் பயிற்றுவிக்க பொருத்தமான செயல்முறையாகும்.

*️⃣கூடியளவு இம்முறையில் ஆசிரியர்களுக்கு வலுவூட்டலாம் .

✳️ செயற்றிட்ட கற்பித்தல் முறையின் படி முறைகள்.

⏺️ திட்டமிடல்
⏺️செயற்படல்
⏺️அவதானித்தல்.
⏺️பிரதிபலிப்பு


1️⃣திட்டமிடல்

☑️குறிக்கோளை அடைவதற்கான வழியை, திட்டமிடுதலை இது குறிக்கின்றது.

☑️செயற்திட்டத்தில் ஈடுபடுவோர் தனியாகவோ , குழுவாகவோ செய்ய வேண்டியவற்றை தீர்த்தல் வேண்டும்.

☑️தேவையான வளங்கள், அவற்றைப் பெறும் வழிகள், உதவி வழங்கத்தக்க தனியாள்கள், கால வரையறைகள், மதிப்பீட்டு செயன்முறைகள், ஆகியவற்றை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

🔘 குறிக்கோள்களை பிரச்சினைகளை தீர்மானித்தல்.

➡️மாணவரின் ஊடாக வெளிக் கொணர்தல்.

➡️தேவையெனின் வழிகாட்டல் வழங்கலாம்.

➡️மாணவரது தேவைகள் ஆற்றலுடன் பொருத்தி இருத்தல் வேண்டும்.

➡️ மாணவரின் பூரண செயற்பாட்டைப் பெறுவதன் மூலம் அப்பிரச்சினையை வெற்றிக் கொள்வதற்கான ஆர்வம் அவர்களிடத்தில் ஏற்படும்.

🔘நடைமுறைப்படுத்தல்

➡️ஒப்படைக்கப்பட்ட வேலைகளை நிறைவு செய்தல்.

➡️தேவையான வழிக்காட்டுதல்களை வழங்கி மேற்பார்வை செய்தல் .

➡️இம் படிமுறையின் இறுதியில் பெறுபேறு கிடைக்கப் பெறுதல் .


🔘மதிப்பீடு

➡️செயற்றிட்டத்தின் போது குறிக்கோள்களின் தன்மைக்கேற்ப மதிப்பீட்டின் தன்மை வேறுபடுதல் வேண்டும்.

➡️குறியீடுகள் நிறைவேற்றப்பட்ட விதம் அளக்கப்படும்.

➡️குறிக்கோளை அறியப்பெற்றுள்ளமையில் அல்லது அடையப்படாமையில் செல்வாக்கு செலுத்தியுள்ள காரணங்கள் தேடி அறியப்படும்.

➡️ மேலும் வெற்றிகரமாக செய்வதற்கு கையாளத்தக்க உத்திகள் பிரேரிக்கப்படலாம்.

⏺️அறிக்கை தயாரித்தல்

➡️செயற்றிட்ட முறையொன்றினை நடைமுறைப்படுத்திய பின்னர் அது தொடர்பாக ஓர் அறிக்கையை எழுதுதல் அவசியமாகும்.
தனித்தனியே பெற்ற சகலரது அனுபவங்களையும் , பொது அனுபவங்களையும் ஆக்கிக் கொள்ள துணையாக்கும்.

➡️அதனை தயாரிக்கும் போது பின்வரும் ஒழுங்கு முறையை அனுசரிப்பது பொருத்தமானதாகும்.

1️⃣ செயற்றிட்டத்தின் பெயரும் அறிமுகமும்.

2️⃣செயற்றிட்டத்தின் குறிக்கோள்.

3️⃣செயற்றிட்டத்தின் பருமட்டான திட்டம்.

4️⃣கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்திய விதம்.

5️⃣எதிர்நோக்கிய பிரச்சினைகளும் அவற்றை தீர்த்துக் கொண்ட விதமும்.


✳️ செயற்றிட்ட வகைகள்

❇️ஆக்க செயற்றிட்டங்கள்.
❇️பொருளாதார பயனுடைய செயல்களில் ஈடுபடும் செயற்றிட்டங்கள்.
❇️கல்விச் செயற்றிட்டங்கள்
❇️பிரச்சினை தீர்த்தல்.

செயற்றிட்ட முறையினைப் பயன்படுத்துவதனால் மாணவர்கள் பெறும் ஆற்றல்கள்

✍ திட்டமிட்டு செயற்படுத்தல்.
✍ தானாக தொடங்கும் ஆற்றலை வெளிக்கொணர்தல்.
✍ உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர்தல்.
✍ தலைமைத்துவத்தை ஏற்கவும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படவும் பழகிக் கொள்ளல்.
✍ ஒரு குழுமமாக ஒத்துழைத்து செயற்படல்.
✍ தீர்மானம் எடுத்தல் மாற்று வழிகளை முன்மொழிதல் போன்ற உயரிய உளத்திறன்கள் போதிக்கப்படுதல்.
✍ சமுதாய தொடர்புகளைப் பேணும் திறன் கட்டியேழுப்புதல்.
✍ சுயமாக செயற்படுதல் மூலம் மாணவரிடத்தே சுய விளக்கம் சுய கட்டுப்பாடும் விருத்தி அடைதல்.

✍ பெரும்பாலும் நிஜ வாழ்க்கை அனுபவங்களுக்கு ஒப்பான வாழ்க்கை அனுபவங்களை மாணவர்கள் பெறத்தக்க வகையில் கற்றல் கற்பித்தல் செய்முறையின் போது மாணவருக்கு அதிக பொறுப்பு ஒப்படைக்கப்படும். முதிர்ச்சி பெற்ற ஆலோசகர் போன்றே ஆசிரியர் தமது வகிபாகத்தை கையாளுதல் வேண்டும்.


✍ நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள இம்முறை பெறும் பயிற்சி அளிப்பதால் வாழ்க்கைப் பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல்களை மாணவர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள்.

அதிலும் தவறுகளை முன்கூட்டியே அறியக் கூடியதாக இருக்கின்றது. இன்று பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடானது 5E மாதிரி முறையினை கொண்டிருக்கின்றமை முக்கியமான ஒரு விடயமாகும்.

THANK YOU