கல்வியின் நான்கு தூண்கள் – Jacques Delors

1996 ஆம் ஆண்டில் டெலோர்ஸ் அறிக்கையின் மிகவும் செல்வாக்குமிக்க கருத்துக்களில் ஒன்று கல்வியின் நான்கு தூண்கள் ஆகும்.

1. அறிவதற்காக கற்றல் ( learning to know )
2. ஆற்றுவதற்காக கற்றல் ( learning to do )
3. வாழக் கற்றல் ( learning to live )
4. இணைந்து வாழ கற்றல் ( learning to live together )

  1. அறிவதற்காக கற்றல் ( learning to know )

அறிவு முறையை சேகரிப்பதை விட அறிவைப் பெற்றுக் கொள்ளக் கூடிய முறைகளை அறிந்து கொள்ளுதல் அறிவதற்காக கற்றல் ஆகும். புகளுடன் வாழ்தல் , தொழில்சார் திறன்களை விருத்தி செய்தல் , தொடர்பாடலுக்கு பழகுதல் என்பனவாகும். மேலும் வாழ்க்கை முழுவதும் கல்வி அளிக்கின்ற சந்தர்ப்பங்களில் உச்ச பயனை அடைவதற்காக கற்பதற்காக கற்றல்.


2. ஆற்றுவதற்காக கற்றல் ( learning to do )

செயலில் ஈடுபடுவதற்காக கற்றல் என்பது தொழில்சார் திறன்களை விருத்தி செய்து கொள்வதும் தொழிற் பயிற்சியை பெறலும் ஆகும். அத்துடன் குழுக்களாக வேலை செய்யும் அதில் பங்கு கொண்டு தேர்ச்சிகளை விருத்தி செய்து கொள்ளவும் வேண்டும். இன்றைய இளைஞர்கள் பல்வேறு சமூக தொழில் அனுபவங்களின் துணையுடன் செயலில் ஈடுபடுவதற்காக கற்க வேண்டியுள்ளது.


3. இணைந்து வாழ கற்றல் ( learning to live together )

தற்கால உலகில் குற்றங்கள் நிறைந்ததும் ஒழுக்கங்கள் குறைந்தும் காணப்படுகின்றன. வரலாறு முழுவதும் மோதல்கள் ஏற்பட்டு இருந்தாலும் தற்காலத்தில் மனித இனம் அழிவை நோக்கியே செல்கிறது. எனவே குடும்பம், பாடசாலை, சமூகம் என்பன சிறப்பாக வாழ பல் கலாசார பெறுமானங்களை அறிந்து கொள்ளுதல், பரஸ்பர புரிந்துணர்வுடன் சமாதானத்தை பாதுகாத்தல் தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்தல் ஏனைய இன மத கலாசாரங்களை மதித்தல் என்பன இணைந்து வாழ கற்றல் ஆகும்.


4. வாழக் கற்றல் ( learning to live )

கல்வியின் மூலம் ஆளுமை விருத்தி அழகியல் சார் திறமைகளை விருத்தி செய்தல் சுயாதீன விமர்சனம் சார் சுதந்திரமான சிந்தனைகளை விருத்தி செய்தல். என்பவற்றுடன் விளையாட்டு, விஞ்ஞானம், கலாசாரம் ஆகிய அம்சங்களை விருத்தி செய்து கொள்வதுடன் ஒருவரிடம் உள்ள திறன்கள் உடல் ஆற்றல்கள் , நினைவு கூறும் ஆற்றல் தொடர்பாடல் திறன்கள் என்பன விருத்தி செய்தல் வேண்டும்.