பிரதமரை சந்தித்த ஆசிரியர் தொழிற் சங்க பிரதிநிதிகள்; இறுதி முடிவு இன்று மாலை???

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசிரிய தொழிற் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) அலரி மாளிகையில் இடம் பெற்றுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்தது.


குறித்த சந்திப்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


பிரதமருடனான சந்திப்பின் பின்னர் ஆசிரியர் தொழிற் சங்கங்கள் தங்களுக்குள் கூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இன்று மாலை இது தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிடவும் அந்த தொழிற் சங்கங்கள் தயாராகி வருகின்றன.