நிதந்தர தீர்வு கிடைக்கும் வரை அதிபர்-ஆசிரியர் பணிப் பகிஷ்கரிப்பு தொடரும்..!

அதிபர்-ஆசிரியர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற் சங்க நடவடிக்கை நிறுத்தப்படாது என இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நேற்று சமரசப் பேச்சு இடம் பெற்றது.


இதில் 02 கட்டமாக, தீர்வைப் பெற்றுக் கொடுக்க பிரதமர் இணங்கிய போதிலும் அந்தத் தீர்வை அதிபர்-ஆசிரியர்களின் தொழிற் சங்கப் பிரதிநிதிகள் நிராகரித்துள்ளனர். இன்று காலை இதுபற்றி பேச்சு இடம் பெற்ற போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


மேலும் இந்தப் பேச்சில் 30ற்கும் அதிகமான தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.


அத்துடன் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பயனற்ற, தூரநோக்கற்ற திட்டங்களுக்கு நிதிகளை ஒதுக்கியும், பாதுகாப்பு செலவுக்கு அதிகளவு நிதிகளை ஒதுக்கியும், வரி மோசடிகள் செய்தும் அரச நிதிகளை வீண்விரயம் செய்யும் அரசு சூழ்ச்சியான முறையில், நாட்டிற்கு அவசியமான கல்வித்துறை மற்றும் அதிபர்-ஆசிரியர்களின் பிரச்சினைகளை திசை திருப்பி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.