அதிபர்-ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு அரசிற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வாக 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதாகக் கூறி அவர்களை ஏமாற்றுவது பொறுத்தமற்றது.

எனவே இந்தத் தீர்மானத்தை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.


அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தற்போது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்று கூறி அவர்களை ஏமாற்றுவது பொறுத்தமானதல்ல. அந்தத் தீர்மானத்தை வர்த்தமானி அறிவித்தல் ஊடாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ உறுதிப் படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.