பாடசாலைக்கு செல்லாத அரசியல்வாதிகளே ஆசிரியர்களுக்கு எதிராக பெற்றோரை தூண்டி விடுகின்றனர்..!

பாடசாலைக்கு செல்லாத அரசியல்வாதிகள் தான் ஆசிரியர்களை தாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆசிரியர்களுக்கு எதிராக பெற்றோரை தூண்டி விடுகிறார்கள் என தேசிய ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமாகிய தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைக்கு செல்லாத அரசியல்வாதிகள் தான் ஆசிரியர்களை தாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆசிரியர்களுக்கு எதிராக பெற்றோரை தூண்டி விடுகிறார்கள்.


பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு எதிராக ஒருபோதும் செயற்பட கூடாது. அத்துடன் ஆசிரியர்-அதிபர் தொழிற் சங்கத்தினர் சற்று விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை தாழ்மையுடன் வலியுறுத்துகிறோம் என நிகவெரடிய – கல்கந்த பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த தேசிய ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.