பாடசாலைகளை திறப்பதா? இல்லையா? அதிபர்- ஆசிரியர்களின் தீர்க்கமான முடிவு இன்று..!

எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதா? இல்லையா? என்பது தொடர்பிலான முடிவை இன்று (18 ) அதிபா்-ஆசிரியா் தொழிற் சங்கத்தினால், ஒன்றிணைந்த முடிவொன்று முன்வைக்கப் படவுள்ளகதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தினரின் தலைவர் யல்வெல பஞ்ஞசேகர தேரர் தெரிவித்தாா்.


பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு பதிலாக அதிபா், ஆசிரியர்களின் போராட்டங்களை முடக்குவதற்கு ஒருசிலரால் அச்சுறுத்தல் விடுக்கப் படுவதாகவும் குறிப்பிட்டாா்.

பொலிஸ் துறை சார்ந்த அமைச்சரினாலும் அறுச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளா்களில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள போவதாகவும் அறிவிக்கிறாா்கள். கல்வி வலயங்களினூடாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. அச்சுறுத்தல் விடுப்பதால் போராட்டத்தை கைவிட முடியாது.


21ஆம் திகதி பாடசாலையை திறப்பது தொடர்பில் இன்று முக்கிய அறிவித்தலொன்றை வெளியிடவுள்ளோம் என கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டாா்.