அதிபர்-ஆசிரியர் போராட்டம் தொடர்பில் முன்னாள் கல்விப் பணிப்பாளரின் நிலைப்பாடு..!

ஆசிரியர் தொழிற் சங்கப் போராட்டம் முழுமையாக ஆசிரியர்கள் நலன் சார்ந்ததே. தொழிலாளர்கள் பாதிக்கப்படும் போது தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொழிற் சங்க ரீதியாக போராட்டங்கள், பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது இலங்கையில் மட்டும் நடைபெறும் நிகழ்வல்ல உலகளாவிய ரீதியில் நடைபெறும் வழிமுறை.

தொழிற் சங்க போராட்டத்தின்போது பயனாளர் பாதிக்கப்படுவர் இது யதார்த்தம். இந்த பாதிப்பின் விளைவால் ஆட்சியாளருக்கு எதிராக ஏற்படும் எதிர்ப்பலைகள் காரணமாக ஆட்சியாளர்களுக்கு தொழிலாளர் கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் நிர்பந்தம் உருவாக்கப்படுகின்றது.


இது பன்னெடுங்காலமாக தொழிளார்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் உத்தி. இந்தவகையில் தான் இலங்கையில் ஆசிரியர்களும் தமது சம்பள முரண்பாட்டை தீர்க போராடுகின்றார்கள். கடந்த 24 வருடங்களாக இப்பிரச்சனை இலங்கையில் காணப்பட்ட போதும் இவ்வாறான போராட்டத்தை ஏன் இப்போது மேற் கொள்கின்றார்கள் என்பது மிகவும் நுட்பமான அணுகுமுறையாகும்.

பாடசாலைகள் வழமையாக இயங்கி கொண்டிருக்கும் காலப் பகுதியில் இவ்வாறான போராட்டத்தை முன்னெடுப்பது பல விமர்சனங்களுக்கு உட்படலாம். ஆனால் தற்போது பாடசாலைகள் கடந்த பல மாதங்களால் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பாடசாலைகள் இன்றுவரை மூடப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் எவரும் காரணமாக மாட்டார்கள். அது அரசின் ஆட்சியாளரின் முடிவு.

எனவே தான் இவ்வாறான காலப்பகுதியில் பயனாளர்களான மாணவருக்கு பாதிப்பு மிகவும் குறைந்த மட்டத்தில் அமையக்கூடியகாலமாக இருப்பதனால் ஆசிரியர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முடிவெடுத்தமை மிகவும் மதிநுட்பமான முடிவாகும்.


இனணயவழி கல்வி பெரும்பாலான மாணவருக்கு கிடைக்க முடிதாத நிலையில் சமத்துவமற்ற கல்விச் செல்நெறிக்கு ஆதரவு வழங்காத கொள்கையை சார்ந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவதா அமைந்திருக்கின்றது.

இந்நிலையில் அரசு தரப்பு அரசியல்வாதிகளும், அவர்கள் ஆதரவாளர்களும், அரசுக்கு ஆதரவான ஆசிரியர்கள் சிலரும் ஆசிரியர் போராட்டங்களை மிகவும் கீழ்தரமாக விமர்சித்து கேலிபண்ணுவது அவர்களின் அறியாமையே.

அரச ஊழியர்களான ஆசிரியர்களை அரச தரப்பை சேர்ந்தவர்கள் இழிவு செய்வது இந்நாட்டு அரசபணியாளர் அனைவரையும் கேலிபண்ணுவதற்கு ஒப்பாகும். ஓர் அரசில் அங்கம் வகிப்போர் தனது நாட்டு பொதுத்துறை ஊழியர்களை அச்சுறுத்துவதோ, கேலிசெய்வதோ அந்நாட்டின் நாகரீகம் அடையாத்தன்மையை உலகறியச் செய்வதாகும்.


போர்காலத்தில் வடமாகாணத்தில் உள்ள அனைவரையும் நாட்டின் ஒற்றுமைக்கு பாதகமாணவர்கள் என உரைத்தவாய்கள் தற்போது வடக்கில் கல்வித்துறை வழமையாக உள்ளது. வடக்கு மாணவர் கல்வியை தடையின்றி கற்கின்றனர் என பிரசாரம் செய்து இனவாத ரீதியில் ஆசிரியர் போராட்டத்துக்கு சாயம் இடமுனைகின்றனர். இதற்கு வடபகுதியை சேர்ந்த சிலர் துணைநிற்பது மிகவும் துர்பாக்கியமாகும்.

எது எவ்வாறோ ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தமது பணியை மேற்கொண்டால் தான் இலங்கையில் உள்ள பாடசாலைப் பிள்ளைகள் சுபீட்சமான எதிர்காலத்தை அனுபவிக்கமுடியும்.
எனவே ஆசிரியர் பிரச்சனைகளை அரசு இணக்கப்பாட்டின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டு வருதலே மாணவர் நலன்சார்ந்து நன்மை பயப்பதாகும்.

மாறாக நாம் அவரை வென்றோம். இவரை வென்றோம் உங்களு பாடம் புகட்ட எமக்கு தெரியாதா என்ற வழியில் அணுகுவது எவருக்கும் உகந்ததாக அமையப்போவதில்லை.

திரு ஆறுப்பிள்ளை இளங்கோ(SLEAS)
Rtd Zonal Director
Island Zone