பாடசாலைகள் ஆரம்பமாக உள்ள நிலையில் பொலிசாருக்கு பறந்த அவசர உத்தரவு..!

பாடசாலைகள் ஆரம்பமாவதை உறுதி செய்வதற்கு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரிகளும் (OIC) தமது பங்களிப்பை செய்ய வேண்டும் என்றும், அதிபர்களை சந்தித்த பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதைத் தடுப்பவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகளை அடையாளம் காண்பது, பாடசாலைகள் திறப்பது பற்றி அதிபர்களை சந்திப்பது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகை தரும் பகுதிகள் பற்றிய தகவல்களைப் பெறுவது ஆகியவற்றையும் செயற்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


எனினும் அதிபர்-ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காது தமது பணிப் புறக்கணிப்பு முடிவில் உறுதியாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.