ஜோசப் ஸ்டாலின் உட்பட ஆசிரியர் சங்கத்தினருக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த மொட்டின் எம்பி..!

ஆசிரியர் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மீது முட்டை வீச்சு நடத்தாமல், அரசர் கால தண்டனை வழங்கவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித் துள்ளார்.


பதுளையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

ஸ்டாலின் என்பவர் கல்வி செயற்பாடுகளை முழுமையாக அரசியல் மயமாக்கியுள்ளார். அரசாங்கத்தால் எதையும் கொடுக்க முடியும் என்றால் இல்லை என்று அரசு கூறப் போவதில்லை. நிச்சயமாக கொடுக்க வேண்டிய விடயங்களை மக்களுக்கு வழங்கும். யார் இல்லா விட்டாலும் தனியாக சென்றாவது ஜோசப் ஸ்டாலினுக்கு முட்டை வீச்சு நடத்த தயாராக இருப்பதாக நான் பகிரங்கமாக அறிவித்தேன்.


ஜோசப் ஸ்டாலினை கொழும்பு காலி முகத்திடலுக்கு அழைத்து அரசர் கால தண்டனை வழங்கியாவது இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியுமாக இருந்தால், தனிப்பட்ட ரீதியில் முயற்சித்தாவது நான் அதனை செய்வேன் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.