பணிக்கு திரும்ப மாட்டோம்; இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிப்பு..!

ஆசிரியர் – அதிபர் தொழிற் சங்கத்தினர் எதிர்வரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமுகமளிக்காமல் பணிப் புறக்கணிப்பில் ஈடுப்படவும், 25 ஆம் திகதி முதல் பாடசாலைக்கு சமுகமளித்து மாற்று தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படவும் தீர்மானித்துள்ளனர்.


அன்றைய தினமே பிற்பகல் 2 மணியளவில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுப்படவும் தீர்மானித்துள்ளோம்.

முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். என அகில இலங்கை ஆசிரியர்-அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.


ஆசிரியர்-அதிபர் தொழிற் சங்கத்தினருக்கிடையில் இன்று இடம் பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.