பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் தொழிற் சங்கங்கள் எடுத்துள்ள முடிவு..!

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில், பாடசாலை திறக்கப்படும் அதே நாளில் போராட்டத்தை முன்னெடுக்க அதிபர், ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாடசாலை ஆரம்ப தினத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதா? இல்லையா? என்பது குறித்து ஆசிரியர் தொழிற் சங்கங்களுக்கு இடையில் இன்று (18) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.


இதன் போதே எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளனர்.

பாடசாலை ஆரம்ப தினத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணிப்பதற்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தீர்மானித்துள்ளனர்.


எனினும், ஒக்டோபர் மாதம் 25ம் திகதி பாடசாலைகளுக்கு செல்ல அதிபர் − ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை பெரும் சிக்கலாக மாறியுள்ள நிலையில், தொழிற் சங்களின் செயல்பாடுகளால் அரசாங்கம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.