எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில் சேவைகள் ஆரம்பம்..!

மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் எதிர்வரும் வியாழக் கிழமை முதல் ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாகும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றை தினம் முதல் , தினமும் 128 முதல் 130 வரையிலான ரயில் சேவைகள் இடம் பெறும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அத்துடன், மாகாணங்களுக்குள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து கொழும்பு வரையிலும் ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.