பாடசாலைகள் ஆரம்பமாக உள்ள நிலையில் காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை..!

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை நாளை முதல் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறுபவர்கள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதவர்களை கைது செய்வதற்காக நாளை (ஒக். 21) முதல் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.


பாடசாலைகள் திறப்பதால், பொதுக் கூட்டங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் போது, ​​சரியான சுகாதார வழி காட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என்று அவர் கூறினார்.


இதற்கிடையே, மேற்கு மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தனிமைப்படுத்தல் சட்டங்கள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்படி செயற்படுகின்றனவா என்பதை அறிய 511 காவல்துறை அதிகாரிகளால் நேற்று (ஒக்டோபர் 19) சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக ஊடக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.


841 பேருந்துகள் மற்றும் 1583 முச்சக்கர வண்டிகள் பரிசோதிக்கப் பட்டதாகவும், 347 பேருந்துகள் மற்றும் 724 முச்சக்கர வண்டிகள் தனிமைப்படுத்தல் விதிகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறியமை கண்டறியப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.