பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள தகவல்.!

திட்டமிடப்பட்டதைப் போன்று எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆசிரியர்கள் நிச்சயமாக சேவைக்கு சமூகமளிப்பார்கள் என தான் நம்புவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (Kabila Perera) தெரிவித்துள்ளார்.


இன்று காலை தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.


நாளை முதல் நான்கு கட்டங்களாக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளிக்காமை தொடர்பில் எவ்வித மனக்கசப்பும் இல்லை. அன்பான தீர்மானம் ஒன்றை நோக்கி பயணிக்க தான் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.