மத்திய, சப்ரகமுவ தமிழ் மொழி பாடசாலைகளுக்கு 5ம் திகதி விடுமுறை; பதில் பாடசாலை 13ல்..!

நாளை (04) இடம்பெறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் மொழி பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 5ஆம் திகதி வெள்ளிக் கிழமை விடுமுறை தினமாக அறிவிப்பதற்கு மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே தீர்மானித்துள்ளார்.


இதற்கமைவாக இத்தினத்திற்குப்பதிலாக எதிர்வரும் 13ஆம் திகதி சனிக்கிழமை,மேலதிக பாடசாலை தினமாக செயல்படுவதற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


தீபாவளி தினமான நாளை மறுதினம் (05) சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இதற்கான அறிவிப்பை விடுத்துள்ளார்.