வவுனியாவில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக அணி திரண்ட பெற்றோர்கள்..!

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட தரணிக்குளம் பகுதியில் அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை தீர்க்க வலியுறுத்தி பெற்றோர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதன் போது ஊர்வலமாக தரணிக்குளம் சந்தி வரை வருகை தந்த பெற்றோர்கள், பழைய மாணவர்கள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


அங்கு, வருகின்ற 2022 வரவு செலவு திட்டத்தில் அதிபர்-ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறும், அதிபர் – ஆசிரியர்களுக்கு கௌரவத்தினை பெற்றுக் கொடுக்குமாறும், இலவச கல்வியை பாதுகாக்குமாறும், பாடசாலையை நடாத்த பெற்றோர்களிடம் பணம் வசூலிக்காதே போன்ற பல கோசங்களும் எழுப்பட்பட்டன.