கர்ப்பிணி ஊழியர்களை கடமைக்கு அழைக்க வேண்டாம் – அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் போர்க் கொடி

கர்ப்பிணி தாய்மாரை மீண்டும் சேவைக்கு அழைப்பதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளா் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரையில், நாட்டில் கொரோனா நிலைமை முழுமையாக குறைவடையா நிலையில் கர்ப்பிணி தாய்மாரை சேவைக்கு அழைப்பது ஆபத்தான நிலைமையாகும் என்றும் அந்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


வரையறைகளுக்கு அமைய அவர்களை சேவைக்கு அழைப்பதற்கு செயலாளா் தெரிவித்துள்ளமை கர்ப்பிணி தாய்மார்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு வழிவகுக்குமென அந்த மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை அதிபர்- ஆசிரியர்களின் போராட்டத்தை முடக்குவதற்காக அவசர அவசரமாக திட்டமின்றி ஆரம்ப பிரிவு பாடசாலைகளை திறந்து அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் பாடசாலை கொத்தணிகளை உருவாக்கியுள்ளனர்.


அத்துடன் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.