வவுனியா மறவன்குளத்தில் அதிபர்-ஆசிரியர்களுக்காக களத்தில் இறங்கிய பெற்றோர்கள்..!

வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட மறவன்குளம் பிரதேசத்தில் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட மறவன்குளம் மற்றும் பூம்புகார் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், அதிபர் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இன்று மதியம் 1.30 மணியளவில் மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நீக்கு நீக்கு அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு , வேண்டும் வேண்டும் கல்விக்கு 6 வீதம் வேண்டும், உறுதிப்படுத்து, உறுதிப்படுத்து பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்து, வழங்கு வழங்கு அதிபர் ஆசிரியரின் சம்பள முரன்பாட்டுக்கு தீர்வு வழங்கு, வழங்கு வழங்கு 24 வருடங்களாக கொள்ளையடித்த ஆசிரியர்களின் பணத்தை வழங்கு,


அமுல்ப்படுத்து அமுல்ப்படுத்து சுபோதினி கமிசன் அறிக்கையை அமுல்ப் படுத்து, நீக்கு நீக்கு இலவச கல்வியில் இடர்களை நீக்கு உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் 24 வருட அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கு, கொத்தலாவல சட்ட மூலத்தை கிளிதெறி, இலவச கல்விக்கான நெருக்கடிகளை நீக்கு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.