சம்பள அதிகரிப்பை கோரி தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில்..!

இலங்கை தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்களது தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.

2021-2023 ஆம் ஆண்டு காலப் பகுதிக்கான தங்களின் சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்தக் கோரி கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள தலைமைக் காரியாலயதுக்கு முன்பாக தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்பாட்டத்தை மேற்கொண்டன.