இன்று முதல் வவுனியா பொது வைத்திய சாலையில் மக்களுக்கு கிடைக்கவுள்ள வரப் பிரசாதம்..!

வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் காத்திருக்கும் இடம் ( Patient waiting area) இன்று 11.30மணியளவில் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த பொது மக்களினால் திறந்து வைக்கப்பட்டது.


வைத்திய சாலைக்கு வருகை தருகின்ற வெளி நோயாளர்கள், கிளினிக் நோயாளர்கள், பார்வையாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்த்து பொருத்தமான சமூக இடைவெளியை பேணுவதற்காக குறிப்பிட்ட தூர இடைவெளியில் அமர்ந்து இருப்பதற்கு வசதியான கதிரைகளுடன் பிரதான நுழைவாயிலுக்கு அருகாமையில் காத்திருப்பு இடம் (Patient waiting Area) அமைக்கப்பட்டுள்ளது.


இவ்விடத்தில் நோயாளர்களின் நலன் கருதி தொலைக்காட்சி பொருத்தப்பட்டு அதில் சுகாதார ஆலோசனைகள், சுகாதார வழிகாட்டல்கள் என்பன ஒளிபரப்பப்படுகின்றது.


எனவே பொறுமையாக இத்தரிப்பிடத்தில் குறிப்பிட்ட தூர இடை வெளியில் ஒழுங்கமைக்கப்பட்ட கதிரைகளில் சமூக இடை வெளியில் அமர்ந்திருந்து ஒவ்வொருவராக சென்று உங்கள் சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறு அனைவரையும் பொதுநலன் கருதி அன்பாக கேட்டுக் கொள்கின்றோம். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.