வவுனியா வெளிக்குளம் பாடசாலையில் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்..!

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட வெளிக்குளம் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைகளுக்கு முன்னால் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.


இந்த கவனயீர்ப்பு போராட்டமானது கொட்டும் மழைக்கு மத்தியிலும் இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டோர் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து வை, இலவசக் கல்வியை வியாபாரமாக்காதே, கொத்தலாவ சட்டமூலத்தை நிறுத்து.


சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்து, இலவசக கல்விக்கு 6 வீதத்தை ஒதுக்கு உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.


குறித்த ஆர்ப்பாட்டங்களில் பெற்றோர், பழைய மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.