அதிபர்-ஆசிரியர் தொழிற் சங்கக் கூட்டணி இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

பல்வேறு துறைகள் தொடர்பான பிரச்சனைகளை முன்வைத்து, வரும் 9ம் திகதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பணி இடங்களிலும், போராட்டம் நடத்தப்படும் என, அதிபர்-ஆசிரியர் கூட்டுத் தொழிற் சங்கக் கூட்டமைப்பு சார்பில்,இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) தெரிவித்தார்.

இன்று (04) கொழும்பில் தொழிற் சங்கங்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அன்று மதியம் அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் லிப்டன் சுற்று வட்டாரத்திற்கு வரவழைக்கப்படுவார்கள் என்றும் ஸ்டாலின் கூறினார். அதாவது ஆசிரியர் – அதிபர் போராட்டம் மற்றும் அதனை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றிய கருத்துக்களைப் பெறுவதும் இதன் நோக்கமாகும்.


வரவு செலவுத் திட்டத்திலும், வரவு செலவுத் திட்டத்திற்கு பின்னரும் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், ஆசிரியர் அதிபர் தொழிற் சங்க நடவடிக்கைக்கு அப்பால் சென்று அனைத்து தொழிற் சங்கங்களின் ஆதரவுடன் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, எண்ணெய், மின்சாரம் மற்றும் துறைமுக தொழிற் சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற் சங்கப் போராட்டத்திற்கு அதிபர்கள்-ஆசிரியர் கூட்டு தொழிற் சங்கக் கூட்டமைப்பும் ஆதரவளிக்கும் என்று ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.