பணிப் புறக்கணிப்பில் ஈடுபட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தீர்மானம்..!

சுகயீன விடுமுறை அறிவிக்கும் வகையில் எதிர்வரும் 8ஆம் திகதி ஒரு நாள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் மற்றும் கடமையில் உள்ள பட்டதாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளன.


பல தொழில்சார் பிரச்சினைகள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்தார்.