எதிர்வரும் 9ம் தேதி தேசிய போராட்ட நாளாக அறிவிப்பு..!

எதிர்வரும் 9ஆம் தேதி செவ்வாய்கிழமை தேசிய போராட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரும்பான்மையான தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து அன்றைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற் சங்க போராட்டம் எழுத்து பூர்வமாக தொடர்ந்தும் செயல்படும் என்றும் தொழிற் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாணவர்களுக்குக் கற்பிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை என்றும் சொல்கிறார்கள்.


ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற் சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு இணையாக இம் மாதம் 9 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.