வடக்கைத் தொடர்ந்து அம்பாந்தோட்டையிலும் இரு ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கொரொனா..!

அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம பிரதேசத்தில் இரு பாடசாலைகளை சேர்ந்த 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளமையினால், அந்த பாடசாலைகளிலுள்ள ஒரு சில வகுப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமகாராம சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகா் அனுர விஜேமுனி தெரிவித்துள்ளாா்.


திஸ்ஸமகாராம, தெபரவெவ ஜனாதிபதி வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மூவருக்கும், திஸ்ஸமகாராம எல்லகல ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டள்ளதால் இவ்வாறு வகுப்பறைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும், தொற்றுக்குள்ளான மாணவர்களை இனங்காண்பதற்காக அந்த பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனா்.


திஸ்ஸமகாராம பிரதேசத்திலுள்ள 18 கிராம சேவகர் பிரிவுகளில் இரண்டு வாரங்களில் 233 ஆக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.


அதேவேளை வடக்கின் வவுனியாவில் மூன்று பாடசாலைகளிலும் கிளிநொச்சி மற்றும் அனுராதபுரத்திலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.