யாழில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை; விரைவில் பதில் பாடசாலை..!

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.


அதனால் யாழ் மாவட்டத்தில் பெரும் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது.

வடக்கு மாகாண ஆளுநருடன் ஆலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.


இதேவேளை இது தொடர்பில் வடமாகா கல்வி அமைச்சின் செயலாளர் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி பதிவாவதால் வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் தொடர்பாக அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்வர்.


அதற்கேற்ப யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு மாவட்டச் செயலாளரின் தீர்மானத்துக்கு அமைய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்துக்கு பொறுப்பாக மாவட்டச் செயலாளரே இருப்பதால் அவரே இது தொடர்பான விடயங்களை மேற்கொள்வார் எனவும், இன்றைய பாடசாலை நாளுக்குப் பதிலாக மீண்டும் பதில் பாடசாலை நடைபெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.