போராட்ட களத்தில் மயங்கி விழுந்த 28வயதான ஆசிரியை உயிரிழப்பு..!

தெனியாய பிரதேசத்தில் இன்று (09) இடம்பெற்ற ஆசிரியா் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட, ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆசிரியை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளாா். அதனை அடுத்து அவரை வைத்திய சாலைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் வைத்திய சாலையில் அனுமதிப்பதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளாா்.


28 வயதுடைய ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாா். இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இதேவேளை அரசின் இத்தகைய தான் தோன்றித்தனமான, கண்டு கொள்ளாத செயற்பாட்டால் இன்னும் எத்தனை அதிபர்-ஆசிரியர்களை இழக்கப் போகின்றோமோ தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழன் செய்தி