யாழ் மற்றும் கிளிநொச்சி பாடசாலைகளுக்கு நாளை முதல் விசேட விடுமுறை(NEW)..!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை முதல் மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலர்கள் அறிவித்துள்ளனர்.


வடக்கு மாகாணத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இரு மாவட்டங்களும் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.