அதிபர்-ஆசிரியர் கூட்டணியுடன் நாளை(10) பிரதமர் மற்றும் பசில் சந்திப்பு..!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் ஆசிரியர்-அதிபர்கள் கூட்டணியுடன் நவம்பர் 10 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பாராளுமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர்.இந்நிகழ்வில் அதிபர் -ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந் நிலையில் சுபோதானி அறிக்கையின் அடிப்படையில், முன் மொழியப்பட்ட சம்பளத்தை அதன் முதல் படியாகப் பெற்றுக் கொள்ள கூட்டமைப்பு நம்புகிறது,


அந்த நிலைப்பாட்டில் இருந்து விவாதத்தில் பங்கேற்பதை தாங்கள் எதிர் நோக்குவதாகவும் நவம்பர் 12 ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கொழும்புக்கு வரவழைக்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும்


அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்கமைக்குமாறு அனைத்து ஆசிரியர்களையும் அதிபர்களையும் கேட்டுக் கொள்கிறோம் என அதிபர் -ஆசிரியர் தொழிற் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
.