கபொத சாதாரண தரப் பரீட்சை நுண்கலைப் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சை..!

கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நுண்கலைப் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சை டிசெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை இடம் பெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.


இதேவேளை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட விருக்கின்றன.


இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தின் ஊடாகவோ, கைத்தொலைபேசி செயலியின் மூலமோ இதற்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பித்ததற்கான பிரதியை தம்வசம் வைத்திருப்பது அவசியமாகும்.