மீண்டும் வவுனியாவில் கொரோனா அச்சம்; அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி..!

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பணி புரியும் உத்தியோகத்தர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த திணைக்களம் மூடப்பட்டுள்ளதுடன், பணியாளர்களை வீட்டிலிருந்து கடமையாற்றுவதற்கு பணிக்கப்பட்டுள்ளது. வவுனியா புகையிரத நிலையத்தின் முன்பாக அமைந்துள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் இருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


இதனையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திணைக்களத்தின் பணிகள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளதுடன், ஏனைய பணியாளர்களை இரண்டு நாட்களிற்கு வீட்டில் இருந்து பணிபுரிய பணிக்கப்பட்டுள்ளது.


எனவே பொதுமக்கள் தேவை நிமித்தம் திணைக்களத்திற்கு செல்வதை தவிர்த்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.