பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; டிசம்பர் பின்னர் ஏற்படப் போகும் ஆபத்து..!

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கை உயர்வடைவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யூ.ரி குலதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதமாகும் போது நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் தொடர் போராட்டங்கள் மற்றும் பண்டிகைகள் காரணமாக மக்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும் பலதரப்பட்ட தரப்பினாலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் பாடசாலைகள் கடந்த திங்கட் கிழமை ஆரம்பிக்கப் பட்டுள்ளதுடன் இடைநிலை மாணவர்களுக்கான கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப் படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.