தனியார்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை திருத்த நாடாளுமன்றம் அனுமதி..!

ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் சட்ட மூலத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவினால் சமர்ப்பிக்கப் பட்டிருந்த நிலையில், குறித்த சட்ட மூலத்திற்கு இன்று அனுமதி கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்தச் சட்டமூலங்கள் ஊடாக தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக, இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்த பட்ச வயது நிர்ணயிக்கப் பட்டிருக்கவில்லை.


பெரும்பாலும் தனியார்துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவது ஊழியர்களுக்கும் தொழில் வழங்குநருக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அடிப்படையாக கொண்டே அமையும்.