போராட்டத்தின் போது உயிரிழந்த ஆசிரியைக்கு வவுனியா முழுவதும் அஞ்சலி பதாதைகள்..!

அதிபர்- ஆசிரியர் சம்பள முரண்பாட்டு போராட்டத்தின் போது உயிர் துறந்த தெனியாய மத்திய கல்லூரியின் ஆசிரியைக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் வவுனியா மாவட்டம் முழுவதும் அஞ்சலி பதாதைகளினை இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தினர் காட்சிப்படுத்தியுள்ளனர்.


அப் பதாதைகளில், கடந்த 9.11.2021 அன்று எமது அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வேளை இயற்கை எய்திய தெனியாய மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவு ஆசிரியை வருணி அசங்க அவர்களிற்கு வவுனியா மாவட்ட அதிபர்-ஆசிரியர் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.