வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட வருணி அசங்கவின் அஞ்சலி நிகழ்வு..!

வவுனியாவில் உள்ள பாடசாலைகளில் இன்றைய தினம் போராட்டத்தில் உயிரிழந்த சக ஆசிரியையான வருணி அசங்கவின் அஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.


இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ம.ஜெகதீஸ்வரன் மற்றும் அதிபர்-ஆசிரியர் ஒன்றிய உறுப்பினரும் ஆசிரிய சேவைச் சங்க வவுனியா தெற்கு செயலாளருமாகிய சி. சிவாகரன் உட்பட இலங்கை ஆசிரிய சேவைச் சங்கத்தினரின் ஒழுங்கமைப்பில் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றன.


அத்துடன் வவுனியாவின் பெரும்பாலான பாடசாலைகளில் மரணித்த ஆசிரியைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை பிரார்த்தனையின் போது அகவணக்கம் செலுத்தப்பட்டு குறித்த அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.