பாடசாலை மாணவியை கடத்தி துஷ்பிரயோகம் செய்ய முயற்சி; மூவர் கைது..!

16 வயது பாடசாலை மாணவியை கடத்தியமை தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (12) பகல் எம்பிலிபிட்டிய பாடசாலையிலிருந்து வெளியேறிய போது, முச்சக்கரவண்டியில் சென்ற மூன்று பேர் மாணவியை பலவந்தமாக தூக்கிச்சென்றுள்ளனர்.


செவனகல பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட மாணவி, அங்குள்ள பாழடைந்த வீடொன்றினுள் வைத்து, ஒருவரால் துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கப் பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எனினும், மாணவி குறித்த நபர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தற்போது மாணவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.