உயர்/சாதாரதர, புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் வெளியாகிய தகவல்..!

எதிர்வரும் பரீட்சைகளுக்கான வினாத்தாள் தயாரிப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகளை நீண்ட நேரம் நடத்த முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


இதன்படி, எதிர்கால புலமைப்பரிசில், உ/த மற்றும் க.பொ.த சாதாரண தர வினாத்தாள்களை தயாரிப்பதில் மதிப்பீடு செய்யப்பட வேண்டிய விடயங்கள் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சையில் மதிப்பீடு செய்யப்படும் பாடம் எதிர்காலத்தில் தேசிய கல்வி நிறுவகத்தினால் சுற்றறிக்கையாக வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


இது தொடர்பில் ஏற்கனவே கணக்கீடுகள் செய்யப் பட்டுள்ளதாகவும், சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பாடங்களையும் உரிய குழுக்கள் ஆய்வு செய்து வருவதாகவும் தர்மசேன தெரிவித்தார். எனினும் இந்த செயற்பாடு வினாத்தாள் தளர்வு அல்ல என்றும் அவர் கூறினார்.