அரசின் 2022 பாதீட்டால் முன்பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்; பணி நிதந்தரமும் இல்லை..!

மனிதவள அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிப்பது முன் பள்ளியாகும். ஒரு பிள்ளையின் முதற் பராயக் கலைத் திட்டம் இங்கிருந்தே ஆரம்பிக்கிறது. பிள்ளையின் தாயாக, தந்தையாக, தம் வாழ்க்கையின் பிரிக்க முடியாத உறவாக எனப் பல பாத்திரங்களில் பரிணமிப்பவர்கள் முன்பள்ளி ஆசிரியர்களேயாவர்.

முன்பள்ளி ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் அரசு உறுதியளித்த போதும் வரவு செலவுத் திட்டத்தில் ஏமாற்றமளித்துள்ளது.


இவ்வாறு வடக்கு- கிழக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


இதேவேளை கடந்த தேர்தல் காலங்களின் போது ஆளும் கட்சிகளதும், அரசின் பங்காளிகளதும் தேர்தல் கால பொம்மைகளாக நிதந்தர நியமனம், சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பயன்படுத்தப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் தேர்தலின் பின்னர் ஏமாற்றப்பட்டனர்.

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பல ஆண்டுகளாக எந்தவித சம்பளமும் இன்றி நிரந்தர நியமனத்தை எதிபார்த்த ஆசிரியர்கள் அரசின் வரவு செலவு திட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.