பல்கலைக் கழகங்களுக்கு தகுதி பெற்றவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்..!

பல்கலைக் கழகங்களுக்கான வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

மேலும் 2020 கல்வியாண்டுக்கான வெட்டுப் புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக் கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதற்கமைய, ஒவ்வொரு மாணவரும் தான் தெரிவாகியுள்ள பல்கலைக் கழகம் மற்றும் பாடநெறிகள் தொடர்பில் அறிந்துள்ளதாக அவர் கூறினார்.

இதனையடுத்து, அவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவில் பதிவு செய்யும் நடவடிக்கையே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.


இதேவேளை, பல்வேறு பீடங்களையும் டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதத்தின் முதற்பகுதியில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.