ஆசிரியர்களும்-அதிபர்களும் தயார் நிலையில்; ஜோசப் ஸ்டாலின் அறிவிப்பு வெளியாகியது..!

பாடசாலை மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப் படுத்துவதற்கு, தெரிவு செய்யப்பட்ட புதிய பாடத் திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு தாயரிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.


மேலும் தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்த ஆசிரியர்களும் அதிபர்களும் தயாராக உள்ளதாகவும் ஆசிரியர் – அதிபர் தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.


கொரோனா பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள், இடைநிறுத்தப்பட்டு மீண்டும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.